சிறப்புக் கட்டுரைகள்

அழகியே...! சூப்பரான... சூடோ மாடல் அழகிகள்

மாடல் அழகிகள் தெரியும். சூடோ மாடல் அழகிகளை (Pseudo Models) தெரியுமா? எந்த விதப் பயிற்சியும் பெறாமல் மாடலிங் செய்யும், இளமையான தோற்றத்தில் உள்ள அழகான பெண்களைதான் ‘சூடோ மாடல்ஸ்’ என்றழைக்கின்றனர்.

மாடல் அழகிகள் தெரியும். சூடோ மாடல் அழகிகளை (Pseudo Models) தெரியுமா? எந்த விதப் பயிற்சியும் பெறாமல் மாடலிங் செய்யும், இளமையான தோற்றத்தில் உள்ள அழகான பெண்களைதான் சூடோ மாடல்ஸ் என்றழைக்கின்றனர். 2000-ம் ஆண்டிற்கு பின்னிறுதியில் இந்தக் கலா சாரம் ஹாங்காங் நகரில் பிரபலமடையத் தொடங்கியது. தற்போது இத்துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் சூடோ மாடல்கள் பற்றி பார்ப்போம்.

ஜீனா ஹோ

ஏழு வயதில் ஜீனா ஹோவின் குடும்பம் பெய்ஜிங்கில் இருந்து ஹாங்காங்கிற்கு இடம்பெயர்ந்தது. 19 வயதாகும்போது மிஸ் ஆசியா கேம் ஷோவில் கலந்துகொள்ள வந்த இவர் மீது மீடியாவின் கவனம் பதிந்தது. அதன் பின் பல தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் சூடோ மாடலாக வலம் வரத் தொடங்கினார். தாராளமயமாக்கல் கொள்கையை சினிமாவிலும் இவர் விட்டுவைக்கவில்லை. அனைத்துப் படங்களிலும் தாறுமாறான கவர்ச்சிக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, சீன இளைஞர்களின் உறக்கம் கெடுத்து விட்டார்.

ஜானிஸ் மேன்

ஹாங்காங்கைச் சேர்ந்த முக்கியமான மாடல்களில் ஒருவர். 14 வயதில் மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கிய இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது முதல் படத்தில் நடிக்கத் தொடங்கியபோது இவருக்கு வயது 19. சினிமா, டி.வி. சீரியல், விளம்பரங்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை. ஆசியாவைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதுவராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ்ஷி சாவ்

சூடோ மாடல்களின் சூப்பர்ஸ்டார் இந்த கிரிஸ்ஷி சாவ். 15 வயது வரை பாஸ்ட்புட் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த இவர், கேம் கேர்ள் என்ற போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அன்று தொடங்கியது இவரது மாடல் வாழ்க்கை. அழகு என்பது இறைவனின் கொடை. அதை ஏன் மறைக்க வேண்டுமென்பது இவரது பாலிசி. யாஹூவில் அதிகம் தேடப்பட்ட புகைப்படத்திற்குச் சொந்தக்காரராகத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் (2009 முதல் 2012 வரை) இடம் பிடித்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இன்று வரை ஹாட் மாடலாகவும் வலம் வருகிறார்.

டாடா சென்

30 வயதாகும் டாடா 2010-ம் ஆண்டில் பர்ஸ்ட் இம்ப்ரெசன் என்ற தனது முதல் போட்டோ ஆல்பத்தை வெளியிட்டுப் பிரபலமடைந்தார். மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தற்போது சரமாரியாகத் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நம் ஊர் நடிகைகள் போல பல விளம்பரங்களிலும் தலைகாட்டி வருகிறார். வல்கேரியா என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டைப் பெற்றது. சிறந்த துணை நடிகை விருதையும் இப்படத்திற்காக வென்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்