சிறப்புக் கட்டுரைகள்

விளையாட்டு ஆணையத்தில் 347 வேலைவாய்ப்புகள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 347 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை பல படிப்புகளை படித்தவர்களுக்கும் இதில் பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய விளையாட்டு ஆணையம் புதுடெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில் ஆந்த்ரோபோமெட்ரிஸ்ட், எக்ஸர்சைஸ் சைகாலஜிஸ்ட், ஸ்ட்ரென்த் கண்டிசனிங் எக்ஸ்பெர்ட், பயோமெக்கானிஸ்ட், சைகாலஜிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 347 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது.

இதில் அதிகபட்சமாக இயன்முறையாளர் பணிக்கு 72 இடங்களும், ஸ்ட்ரென்த் கண்டிசனிங் எக்ஸ்பெர்ட் பணிக்கு 62 இடங்களும் பிஸியோ தெரபிஸ்ட் பணிக்கு 47 இடங்களும், நர்சிங் அசிஸ்டன்ட் பணிக்கு 36 இடங்களும், எக்சர்சைஸ் பிஸியாலஜிஸ்ட் 34, ஆந்த்ரோபோமெட்ரிஸ்ட் 23 இடங்களும் உள்ளன.

லேப்டெக்னீசியன், பார்மசிஸ்ட், பயோகெமிஸ்ட், பயோ மெக்கானிஸ்ட், சைகாலஜிஸ்ட் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

20-12-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பெரும்பாலான பணிகளுக்கு 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரி தரத்திலான பணிகளுக்கு 45 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி :

ஆந்த்ரோபாலஜி, ஹியூமன் பயாலஜி, பிசியாலஜி, ஸ்போர்ட்ஸ் சயின்ஸ், ஸ்போர்ட்ஸ் கோச்சிங், கிளினிக்கல் சைகாலஜி, அப்ளைடு சைகாலஜி, ஸ்போர்ட்ஸ்மெடிசின், பயோ கெமிஸ்ட்ரி, பிஸியோதெரபி, பார்மஸி, நர்சிங், மெடிக்கல் லேப் டெக்னாலஜி போன்ற மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. மருத்துவம் சாராத பணியிடங்களில் டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை :

தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நேர்காணல் அழைப்புகள் இ-மெயில் முகவரி மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணைய பக்கத்தைப் பார்க்கலாம்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி