சிறப்புக் கட்டுரைகள்

வயதும்.. வாழ்க்கையும்..

வயது, முரண்பாடான உணவுப் பழக்கம், உடல் பலவீனம் மற்றும் பிற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எளிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

தினத்தந்தி

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுதான் வைரஸ் தொற்றுவின் பிடியில் இருந்து விலகி இருப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுடைய உடல் அப்போதைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை. அது காலப்போக்கில் குறையவும் செய்யலாம்.

புதிதாக பிறந்த குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அவைகளின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு முழு வளர்ச்சியை எட்டியிருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் புகட்டவேண்டும். அதுதான் அவர்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். ஆனாலும் அவர்களை கொரோனா தாக்காத அளவுக்கு பாதுகாப்பதும் மிக அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்!

புரோ பயோடிக் உணவு: தயிர், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளில் புரோ பயோடிக் அடங்கியுள்ளது. அவற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் வைரசுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டவை. ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் அவை வலுசேர்க்கக்கூடியவை.

பிரீ-பயோடிக் உணவு: பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழுதானியங்கள், வெங்காயம், வாழைப்பழம், கடற்பாசி போன்றவைகளில் இந்த சத்து காணப்படுகிறது. அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவுகின்றன.

வைட்டமின் ஏ: இதில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு உயிரணுக்களை ஆரோக்கியமாக உருவாக்க உதவுகின்றன. பூசணி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவைகளில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் சி: சிட்ரஸ் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, காலிபிளவர், ப்ரோக்கோலி, தக்காளி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவைகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அது பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் வைட்டமின் சி, சுவாச பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது.

துத்தநாகம்: இது வைரஸ் தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ரத்த வெள்ளை அணுக்கள் இன்றியமையாதவை. தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்ட அவற்றை உருவாக்குவதில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் துத்தநாகம் சத்து குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.

வைட்டமின் ஈ: காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், பாதாம், முழு தானியங்கள், கோதுமை மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது. வைரசால் ஏற்படும் தொற்றுநோய்களை அவை தடுக்கின்றன. சுவாச கோளாறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது.

தூக்கமின்மை: உடல் தனக்கு தேவையான ஓய்வினை பெற்று, சக்தியை மேம்படுத்திக்கொள்ள போதுமான அளவு தூங்கவேண்டும். தூங்கும்போது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் சைட்டோகைன் வெளியிடப்படும். ஆனால் குறைவான நேரம் தூங்குவது, தூக்கமின்மையால் இரவில் தவிப்புக்குள்ளாவது சைட்டோகைன்கள் வெளியீட்டை குறைத்துவிடும். இது நோய்த்தொற்றுகள் உடலில் புக காரணமாகிவிடும்.

உடல் பருமன்: கொரோனா வைரஸ் சாதாரணமான நபரை விட பருமனான உடல்வாகு கொண்டவர்களை அதிகம் பாதிக்கும். அவர்களின் உடலில் இருக்கும் கொழுப்பு திசுக்கள் அடிபோசைட்டோகின்களை உருவாக்குகின்றன. இது அழற்சி செயல் முறையை ஊக்குவித்து உடலை பாதிக்கச்செய்யும்.

சுற்றுச்சூழல்: வசிப்பிட சுகாதாரமும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காற்றில் கலந்திருக்கும் புகை மற்றும் பிற துகள்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மோசமாக்கும். அதனால் நோய்த்தொற்றுக்கான சூழல்கள் அதிகரிக்கும். வயதாகும்போது உள்உறுப்புகளின் செயல்திறன் குறைந்துபோகும். எலும்பு மஜ்ஜையின் ஆற்றலும் குறையும். அதனால் சரியான உணவுப்பழக்கமும், முறையான உடற் பயிற்சியும் உடலுக்கு அவசியம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்