சிறப்புக் கட்டுரைகள்

2018 டிசம்பர் 31 நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் ரூ.19,000 கோடி பாக்கி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

தினத்தந்தி

புதுடெல்லி

2018 டிசம்பர் 31 நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.19,000 கோடி பாக்கி வைத்துள்ளன.

இரண்டாவது இடம்

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் சர்க்கரை நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இந்த வகையில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

நடப்பு சந்தை பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) தெரிவித்து இருக்கிறது. இது இச்சங்கத்தின் முந்தைய மதிப்பீட்டுடன் (3.15 கோடி டன்) ஒப்பிடும்போது 2.5 சதவீதம் குறைவாகும். கடந்த 15-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 146.86 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 135.57 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 8.23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ஏறக்குறைய ரூ.19,000 கோடி பாக்கி வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில், கடந்த 2017-18 பருவத்தில் ஆலைகள் வைத்திருந்த பாக்கித் தொகையான ரூ.2,800 கோடியும் அடங்கும். 2017 டிசம்பர் 31 நிலவரத்துடன் ஒப்பிடும்போது நிலுவைத் தொகை ரூ.10,600 கோடி அதிகரித்துள்ளது.

நடப்பு 2018-19 பருவத்தில் இந்திய ஆலைகள் 30-35 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 50 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆலைகள் தத்தம் கோட்டாவை முறையாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் ஒழிய 50 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியாக வாய்ப்பில்லை என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இறக்குமதி வரி

கடந்த 2017-18 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்ததால் உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்து இருக்கிறது. ஏற்றுமதி சர்க்கரைக்கு முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி (50 சதவீதத்தில் இருந்து) 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்