இந்தியா அதிகமாக கார் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடம் வகிக்கிறது.
சீனாவில் 1999-ல் 6லட்சம் கார்கள் உருவாக்கப்பட்டன ஆனால் கடந்த ஆண்டில் 2 கோடியே 35 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஜப்பான் கடந்த ஆண்டில் 84 லட்சம் கார்களை உருவாக்கி உள்ளது. இந்தியா 1999-ல் 5 லட்சம் கார்களை உருவாக்கியது. 2018-ல் 41 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் அமெரிக்க 1999-ல் 56 லட்சம் கார்களை உருவாக்கியது. தற்போது 28 லட்சம் கார்களாக உற்பத்தி சதவீதத்தை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது.