சிறப்புக் கட்டுரைகள்

இயற்கை உரம் தயாரிக்கும் தானியங்கி இயந்திரம்

தானியங்கி முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை கான்பூர் ஐ.ஐ.டி.யும், தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது.

தினத்தந்தி

இந்த இயந்திரத்தில் கார்பன் பில்டர், ஏர் பம்புகள், சோலார் பேனல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் கழிவுகளை 20 நாட்களில் உரமாக மாற்றும். பூமி என்று இந்த இயந்திரத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் அபய் கரான்டிகர் கூறுகையில், கழிவு மேலாண்மைதான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்த இயந்திரம் அமையும். இயற்கைக் கழிவுகளை உரமாக்கும் இந்த இயந்திரம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் இயந்திரங்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், உணவகங்களிலும், நிறுவனங்களிலும் வைக்கலாம். இதனை எளிதாகக் கையாளலாம். மற்ற இயந்திரங்களைவிட இந்த இயந்திரம் 30 சதவிகிதம் விலை குறைவாக இருக்கும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து