இது புளூடூத் வி 5.1 இணைப்பு கொண்டது. 4 மைக்ரோபோன் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் உள்ள பேட்டரி 25 மணி நேரத்துக்கான மின் திறனை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
டைப் சி போர்ட் சார்ஜிங் இணைப்பு வசதி கொண்டது. ஒரு மணி நேரம் செயல்பட 5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. கருப்பு, நீலம், பச்சை உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,999.