சிறப்புக் கட்டுரைகள்

புரூட் கஸ்டர்ட்

ஒரு கிளாஸ் பால், கொஞ்சம் கஸ்டர் பவுடர், ஒரு கப் நறுக்கிய பழங்கள் (வாழை, அன்னாசி, கொய்யா, மாதுளை முத்துகள், ஆப்பிள்), கொஞ்சம் சர்க்கரை இவை இருந்தால் வீட்டிலேயே ‘புரூட் கஸ்டர்ட்' செய்யலாம். எப்படி செய்வது என ஆவலாக கேட்கும் குட்டீஸுக்கு சிறு விளக்கம் இதோ...

ஒரு கப் பாலில், இரண்டு தேக்கரண்டி கஸ்டர் பவுரை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதனோடு சர்க்கரை அல்லது தேன் கலந்தால், பால் கெட்டியாக வரும். அதை பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து வெளியே எடுங்கள்.

இப்போது குளுகுளுவென பால் கலவை ரெடியாகி இருக்கும். அதில் நறுக்கி இருக்கும் பழங்களை கலந்து உடனடியாகவும் சுவைக்கலாம். அல்லது மீண்டும் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம்.