சிறப்புக் கட்டுரைகள்

குத்தாட்டம் போட்டு ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாதுகாப்புப்படை வீரர்கள்! வைரல் வீடியோ

ஒலி பெருக்கி மூலம் பாட்டுகளை கேட்டு ஆடியும் பாடியும் ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினர்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் இந்து மதத்தினர் கொண்டாடும் பண்டிகை ஹோலி.

இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை வட இந்தியாவில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளையும், தங்கள் மகிழ்ச்சியையும்

பரிமாறிக்கொண்டனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், ஹோலி பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியை தூவியும், ஒலி பெருக்கி மூலம் பாட்டுகளை கேட்டு ஆடியும் பாடியும் ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது