சிறப்புக் கட்டுரைகள்

2020 மார்ச் மாதத்திற்குள் வங்கிகளின் வாராக்கடன் 8 சதவீதமாக குறையும் - கிரிசில் நிறுவனம் மதிப்பீடு

2020 மார்ச் மாதத்திற்குள் இந்திய வங்கிகளின் வாராக்கடன் 8 சதவீதமாக குறையும் என கிரிசில் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

தினத்தந்தி

வாராக்கடன் பிரச்சினையால் நாட்டின் வங்கித்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்துறையைச் சேர்ந்த பல வங்கிகள் இதனால் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. வாராக்கடனைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இனி வரும் காலங்களில் பல பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான கிரிசில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் அவை வழங்கிய மொத்த கடனில் 8-8.5 சதவீதமாக குறையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. 2018 மார்ச் இறுதியில் அது 11.5 சதவீதம் என்ற அளவில் மிக அதிகமாக இருந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு