அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜோத்பூரில் உள்ள தேசிய நோய்த்தொற்று நோய்களுக்கான நடைமுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.ஆர்.என்.சி.டி) இயக்குனர் டாக்டர் அருண் சர்மா, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டியதில்லை. இருப்பினும் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏதேனும் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், கைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி வழக்கமான பயிற்சிகளை செய்யலாம் என்கிறார்.