பள்ளிக் கல்வியை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து, ஆரம்பபள்ளி ஆசிரியர்கல்வி டிப்ளமோ அல்லது பட்டதாரி ஆசிரியர் கல்வி படித்தவர்கள், மற்றும் பட்டப் படிப்புடன், இளநிலை ஆசிரியர் கல்வி படித்தவர்கள் 5-ம் வகுப்பு வரையான ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்புடன், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி, இளநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தாள்-1 அல்லது தாள்-2 தேர்வு எழுத விரும்பும் பொது, ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000-ம், இரு தாள்களையும் சேர்த்து எழுதுபவர்கள் ரூ.1200-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல ஏதாவது ஒரு தாள் எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் ரூ.500-ம், இரு தாள்களையும் எழுத விரும்பும் இந்த பிரிவினர் ரூ.600-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-2-2020-ந் தேதியாகும். இதற்கான தேர்வு ஜூலை மாதம் 5-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.ctet.nic.in விவரங்களை இனி பார்க்கலாம்.