டிசம்பர் 2019-க்கான சி.டி.இ.டி. தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.
பள்ளிக்கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்கள் 5-ம் வகுப்புக்கு உட்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கும், பட்டப்படிப்புடன், பி.எட் படித்தவர்கள் 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுதினால் ரூ.700-ம், 2 தாள் தேர்வுகளை எழுதினால் ரூ.1200-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒரு தாள் தேர்வுக்கு ரூ.350-ம், இரு தாள்களையும் எழுதினால் ரூ.600-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 18-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்வு டிசம்பர் 8-ந் தேதி நடத்தப்படுகிறது.
இது பற்றிய விரிவான விவரங்களை https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.