இன்னும் ஒரு சில மாதங்களில் புதுவிதமான கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கும் எனவும், உலகில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மீதான அச்சமும், விழிப்புணர்வும் மக்களிடம் குறைந்துவிட்டது.
பொதுமக்கள் பலர் கொரோனாவை பொருட்டாகவே மதிக்காமல் இருக்கின்றனர். இவ்வாறு வாழும் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பகுதியில் சக்கரத்தின் மேல் பெண்கள் என்ற பெயரில் சைக்கிளிங் மேற்கொள்ளும் பெண்கள் குழு பயணம் செய்தனர். பெண்களின் உடல்நலன் விழிப்புணர்வுக்காக எப்போதும் இந்தப் பெண்கள் குழு சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். இந்த முறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.
இந்த சைக்கிள் பயணம் `பியர் டு பியர் ஹெல்ப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 10 சைக்கிளிங் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று நீண்ட பயணம் செய்தனர். விஜிடா, நெஹா, ஷிவானி மற்றும் விஜயாந்தி ஆகிய பகுதிகளில் அவர்கள் சைக்கிளிங் செய்தனர்.
அவர்களுடன் `பியர் டு பியர் உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் உடன் சென்றனர். அவர்கள் ஏழை மக்களுக்கு சோப்புகள், சானிடைசர், முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை வழங்கிய தோடு, முக கவசத்தின் அவசியத்தையும் உணர்த்தினர்.