சிறப்புக் கட்டுரைகள்

கொரோனா தொற்று பாதிப்பு ஊரடங்கு: மக்களின் மன நிலை ;மிகப்பெரிய கருத்துக்கணிப்பு

கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஊரடங்கு நேரத்தில் மக்களின் மன நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மிகப்பெரிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. இதனால், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உகான் நகரத்தைச் சீனா முடக்கியது. உகான் நகரில் இருந்து மக்கள் வெளியேறவோ, உகானுக்கு செல்லவோ முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர, பிற காரணங்களுக்கு வெளியில் வர அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹூபெய் மாகாணத்தில் உள்ள பிற நகரங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சீனா எடுத்த தொடர் நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா பரவுவது கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன.

அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றன. இது குறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா சீனா இந்த விஷயத்தில் உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை உலகிற்கு கூற வேண்டுமெனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய பொதுக் கருத்தை அறிய ஒரு சமூகவியல் ஆய்வின் ஆரம்ப கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுக்கு பி.எம். பார்கவா அறக்கட்டளை மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுடன் தொடர்புடைய அன்காட்(ANHAD)என்ற அமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் ஊரடங்கில் மக்களின் மன நிலை என்ற தலைப்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில்

சமூகவியலாளர்கள் சுர்ஜித் சிங் மற்றும் பி.வி.எஸ். குமார், மற்றும் சமூக ஆர்வலர் லீனா தபிரு மற்றும் ராசா ஆகியோர் 2,223 பதிலளித்தவர்களை பேட்டி கண்டனர்

ஆன்லைனில் ஆங்கில வினாத்தாள் வழியாக 1,200 பேரிடமிருந்தும், இந்தியில் 500 பேரும் பதில் அளித்தனர்.

பதிலளித்தவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் வட இந்தியாவில் இருந்தும், அடுத்து 18 சதவீதம் பேர் மேற்கு இந்தியாவிலிருந்தும் பதில் அளித்தனர்.6 சதவீதம் மட்டுமே தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து வந்தவர்கள் மேற்குவங்காளம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் 5 சதவீதம் பேர்.

பங்கேற்ற 10 பேரில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் 21-40 வயதுடையவர்கள்.

60 சத்வீதம் பேர் தாங்கள் பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டதாரிகள் என்றும், முதன்மையாக அரசு வேலைகளில் இருப்பவர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று 10 பேரில் மூன்று பேர் நம்புகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அல்லது 42 சதவீதம் பேர் இது இயற்கையாகவே உருவானதாக நம்புகின்றனர்.

சுமார் 54 சதவீதம் பேர் பேர் ஊரடங்கு தொற்றுநோயை "சமாளிக்க உதவியது" என்றும் 30 சதவீதம் பேர் ஊரடங்கு "சிக்கல்களை உருவாக்கியது" என்று கூறி உள்ளனர்.

ஐந்தில் ஒரு பகுதியினர் - அவர்கள் வேலைகள் மற்றும் வருவாயை இழந்துவிட்டதாக கூறி உள்ளனர். 3 சதவீதம் பேர் "பசி மற்றும் பட்டினியை எதிர்கொண்டதாக கூறி உள்ளனர். 10 ல் ஏழு பேர் சமூக விலகல் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்றும் 18 சதவீதம் பேர் இது தொற்றுநோயை ஒழிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

நீங்கள் வெளியே செல்லும் போது கொரோனா தொற்றுக்கு பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு 64 சதவீதம் பேர் பயப்படுவதாகக் கூறினர், 18 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு