சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : பிரிட்ஜ் உருவான விதம்

இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாக செய்து வந்திருக்கிறான்.

தினத்தந்தி

அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் பிரிட்ஜ் எனும் குளிர்சாதன பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது.

முதலில் 1750-களில் ரெப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ் கட்டி உருவாக்கும் எந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைக்கேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்தத்தில் வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பிரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது.

1930 வரை இந்த சோதனை ஐஸ் தயாரிக்கும் முயற்சியாகத்தான் இருந்தது. 1930-ம் ஆண்டு முதன் முதலில் மக்கள் உபயோகப்படுத்தும் பிரிட்ஜ் என்ற அமைப்பு உருவானது. உணவுப் பொருட்கள், மாமிசம் ஆகியவை கெடாமல் இருக்கவும், ஐஸ் கட்டி தயாரிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.

பின்பு அதன் வடிவம், அமைப்பு, திறன் ஆகியவை மாற்றம் கண்டு, தற்போது தொழிற்சாலைகளும்கூட மிகப் பெரிய பிரிட்ஜ் அமைப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத கண்டுபிடிப்பாக மாறியுள்ளது. பல நிறுவனங்கள் எளிதில் கெடக்கூடிய பொருளை அதிக நாட்கள் வைத்திருக்க இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக மாறியுள்ளது.

அதைவிட முக்கியமாக, இன்று பல வீடுகளில் பிரிட்ஜ் இல்லை எனில், காலை உணவு இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. காலை இட்லிக்கான மாவு முதல் இந்த வாரம் முழுவதுக்கும் வேண்டிய உணவுப் பொருட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காகவே மாறியுள்ளது பிரிட்ஜ்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு