சிறப்புக் கட்டுரைகள்

டெல்லி காவல்துறையில் டிரைவர் பணி

டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 1,411 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

21 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 2-7-1992-க்கு முன்போ, 1-7-2001-க்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

 12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-7-2022.

விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை