52 வயதாகும் பேலிஸ் சமீபத்தில் பட்டம் வென்றார். இவர் முதலில் 2001-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார். இவர் சாம்பியன் பட்டம் வென்று 20 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக இவரது பெயரில் பேலிஸ் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
935 சி.சி. திறன் கொண்ட இரட்டை என்ஜினைக் கொண்ட இது 155 ஹெச்.பி. திறனையும், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிளின் எடை 3 கிலோ (197 கி.கி) குறைந்துள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதை இறக்குமதி செய்து அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.