சிறப்புக் கட்டுரைகள்

தி கன்சல்டன்ட்

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரில்லர் வகை தொடர் இது.

தினத்தந்தி

பிரபல வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் விடுமுறையில் செல்கிறார். அவருக்கு பதிலாக அந்த நிறுவனத்தின் ஆலோசகர் ஒருவருக்கு தற்காலிகமாக தலைமை பொறுப்பு வழங்கப்படுகிறது.

நிறுவனத்தின் வணிகத்தை சரிவடையாமல் இருக்க எதையும் செய்யும் சர் வாதிகாரியாக அந்த ஆலோசகர் செயல்படு கிறார். ஊழியர்களின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் இருப்பார். பச்சாதாபம் ஈவு, இரக்கமின்றி எவ்வாறு ஊழியர்களை அந்த ஆலோசகர் வேலை வாங்குகிறார் என்பதே இந்த தொடரின் கதை.

இப்போது இயங்கி வரும் பல கார்பரேட் நிறுவனங்களில் உள்ள பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களில் நடைபெறும் பித்தலாட்டங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

ஆஸ்கார் விருது வென்ற கிறிஸ்டோபர் வால்ட்ஸ் கன்சல்டன்டாக நடித்துள்ளார். இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ஜான்கோ அன்செயின் போன்ற படங்களில் காட்டிய சிறப்பான நடிப்பை இதிலும் வால்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். 8 அத்தியாயங்களாக வந்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்