சிறப்புக் கட்டுரைகள்

ஏப்ரல் மாதத்தில் ரூ.1,377 கோடிக்கு இரும்புத்தாது ஏற்றுமதி

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1,377 கோடிக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகி இருக்கிறது. முந்தைய மாதத்தில் (மார்ச்) அது ரூ.1,072 கோடிக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது.

தினத்தந்தி

கச்சா உருக்கு உற்பத்தியில் இரும்புத்தாது மிக முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் உருக்கு துறையின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருக்கிறது. 2029-30-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை 30 கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதற்காக ரூ.10 லட்சம் கோடி அளவிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் இரும்புத்தாது ஏற்றுமதி ரூ.1,377 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.564 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 144 சதவீதம் அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு அடிப்படையில் இரும்புத்தாது ஏற்றுமதி 131 சதவீதம் அதிகரித்து (8.60 கோடி டாலரில் இருந்து) 19.80 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது