ஏற்றுமதி டாலர் மதிப்பில் 13 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இதே மாதத்தில் ரூபாய் மதிப்பில் இந்தப் பொருள்கள் ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்து ரூ.29,213 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.33,813 கோடியாக இருந்தது.
இதே மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 18 சதவீதம் குறைந்து 1,106 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,351 கோடி டாலராக இருந்தது. அந்த மாதத்தில், ரூபாய் மதிப்பில் இந்தப் பொருள்களின் இறக்குமதி 19 சதவீதம் குறைந்து (ரூ.97,134 இருந்து) ரூ.79,040 கோடியாக குறைந்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பெரும் சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.