இந்திய உணவு கழகத்தில் (எப்.சி.ஐ) என்ஜினீயரிங் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்), அக்கவுண்ட், டெக்னிக்கல் உள்பட பல்வேறு பிரிவுகளில் 5,043 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ., டிப்ளமோ, பி.காம், பி.எஸ்சி போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
என்ஜினீயரிங் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 25, 27 வயது நிரம்பி இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசிதேதி: 5-10-2022. https://www.recruitmentfci.in/current_category_third_main_page.php?lang=en என்ற இணைய பக்கம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.