சிறப்புக் கட்டுரைகள்

'ஹை-டெக்' தொழில்நுட்பம் 'ஹைப்பர்லூப்'..!

அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஹைப்பர்லூப் போக்குவரத்து.

ஒரு சுற்றுலா போகிறோம். பேருந்து, ரெயில், விமானம் என தனித்தனியாக பயணிக்க வேண்டும். அதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல ஓட்டல்களுக்கென தனியாக செல்ல வேண்டும். அதற்காகவும் முன்பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செல்வதைவிட இருக்கும் இடத்தில் இருந்தபடியே இவை எல்லாம் கிடைத்தால் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே முடியாதல்லவா?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் நெவாடா பல்கலைக்கழக ஆர்கிடெட் மாணவர் பிராண்டன் சைப்ரச்ட்டுக்கு இந்த கற்பனைக்கு செயல்வடிவம் கொடுப்பதுதான் ஒரே கனவு, லட்சியம் எல்லாம். ஓட்டலில் இருந்தே பஸ், ரெயில், விமானம் என மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கான செயல்வடிவத்தைக் கொடுத்து வருகிறார் இந்த இளைஞர். இவரின் யோசனைப்படி, எதிர்காலத்தில் அமெரிக்காவில் பல்வேறு இடங்களிலுள்ள ஓட்டல்கள் அனைத்தையும் 'அதிவேக வளையப் போக்குவரத்து' என்றழைக்கப்படும் 'ஹைப்பர்லூப்' முறையில் இணைத்துவிட்டால் பேருந்து, ரெயில், விமானம் என தனி டிக்கெட் எடுக்கத் தேவையில்லையாம்.

அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஹைப்பர்லூப் போக்குவரத்துதான். தங்கி பயணிக்கும் அனுபவத்தை இனிதாக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஹைப்பர்லூப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயல்கிறார் இந்த இளைஞர்!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்