சிறப்புக் கட்டுரைகள்

ஹோண்டா சி.பி 300.எப்.

இரு சக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் புதிதாக சி.பி 300.எப். மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று கண்கவர் வண்ணங்களில் (ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக், மார்வெல் நீலம் மெட்டாலிக், ஸ்போர்ட்ஸ் சிவப்பு) வந்துள்ளது. இதில் டீலக்ஸ் (விற்பனையக விலை சுமார் ரூ.2,25,900) மற்றும் டீலக்ஸ் புரோ (விலை சுமார் ரூ.2,28,900) என இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன.

ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், டியூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி, இரண்டு சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இதன் எடை 153 கிலோவாகும். இதன் பெட்ரோல் டேங்க் 14.11 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 293 சி.சி. திறன் மற்றும் ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டது.

இதில் 6 கியர்கள் உள்ளன. முகப்பு விளக்கு எல்.இ.டி.யால் ஆனது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது. இதன் பின்புற மோனோ ஷாக் அப்சார்பரை 5 நிலை களில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இரண்டு தனித்தனி இருக்கைகள் உள்ளன. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்