சிறப்புக் கட்டுரைகள்

மனித உடலும், தண்ணீரும்...!

தண்ணீரையும், மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியமானது. தண்ணீர் தான் ஜீரணத்துக்கு உதவுகிறது.

தினத்தந்தி

வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை கடத்துகிறது. உடலில் சேரும் திட மற்றும் திரவக் கழிவினை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் அவசியம். நமது உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். இதில் இருந்து 5 முதல் 10 சதவீதம் நீர் உடலில் இருந்து வெளியேறினாலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் மரணம் வந்து சேரலாம்.

ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சில நாட்களை ஓட்டலாம். தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் ஒரு பாதுகாப்பு போர்வை போலவும், மெத்தை போன்றும் தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும் ரத்தத்தின் அடிப்படைக்கும் மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், தண்ணீர், கோழைவடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாக திகழ்கிறது.

உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கும் உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம் முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவே தான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் 75 முதல் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குழந்தைகளின் தோல் மென்மையானதாக காணப்படுகிறது.

அதுவே 65-70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாக குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் கட்டாயம் தேவை.

ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சில நாட்களை ஓட்டலாம்.

தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கமுடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் ஒரு பாதுகாப்பு போர்வை போலவும், மெத்தை போன்றும் தண்ணீர் செயலாற்றுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்