சிறப்புக் கட்டுரைகள்

ஹூண்டாய் ஜெனிசிஸ் பேட்டரி கார்

ஹூண்டாய் நிறுவனம் முழுவதும் பேட்டரியில் இயங்கும் புதிய மாடல் காரை ஜெனிசிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

முதல் முறையாக இந்த மாடல் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச வாகன மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஜி 80 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இது 370 ஹெச்.பி. திறனையும் 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இந்தியாவில் இந்த மாடல், பேட்டரியில் இயங்கும் தொடக்க நிலை எஸ்.யு.வி.யாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆவதற்கு வசதியாக 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம் தரப்படுகிறது. இது 350 கிலோவாட் வரை விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

இதை ஸ்டார்ட் செய்து 4.9 விநாடிகளில் 96 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடிவது சிறப்பம்சமாகும். சோதனையின்போது ஒரு முறை சார்ஜ் செய்ததில் 500 கி.மீ. தூரம் வரை இது ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டுக்கு முன்பாகவே பேட்டரி கார் அறிமுகம் குறித்த செய்திகளை ஹூண்டாய் வெளியிட்டிருந்தது. தற்போது அதற்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டு புதிய மாடலான ஜி 80 காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம் சாலையின் தன்மைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. சூரிய ஆற்றலில் மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும் வகையில் சூரிய பலகை இதன் மேல்பகுதியில் உள்ளது கூடுதல் சிறப்பாகும். விரைவிலேயே இந்த பேட்டரி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்