கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மிகச் சிறப்பான ஸ்போர்டியர் தோற்றத்தை அளிக்கும் வகையில் இதன் வெளிப்புற வடிவமைப்பு உள்ளது. மிக மெல்லியதான எல்.இ.டி. முகப்பு விளக்கு, கம்பீரமான தோற்றமளிக்கும் கிரில் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். முன்புற பம்பர் தோற்றமும் மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் 10.3 அங்குல தொடுதிரை உள்ளது.
இதில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ டிரைவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் புதிய 7-வது தலைமுறை தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 வேரியன்ட்கள் வந்துள்ளன. பெட்ரோல் மாடலில் (530 ஐ) ஒன்றும், டீசல் மாடலில் (520 டி மற்றும் 530 டி) இரண்டு மாடலும் கிடைக்கும். இதில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் உள்ளது. இது 259 ஹெச்.பி. திறனையும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் 530 டி மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் உள்ளது.
இது 265 ஹெச்.பி. மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இந்த மூன்று மாடலுமே 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.69.10 லட்சம்..