நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) 3,365 கோடி டாலருக்கு 955 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்து 327 கோடி டாலராக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 397 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 258 கோடி டாலராக இருந்தது. ஆக இறக்குமதி 54 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், இதே காலத்தில் வெள்ளி இறக்குமதி 48 சதவீதம் சரிவடைந்து 25 கோடி டாலராக உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ரூபாய் மதிப்பில் தங்கம் இறக்குமதி 63 சதவீதம் உயர்ந்து ரூ.27,578 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.16,930 கோடியாக இருந்தது. வெள்ளி இறக்குமதி 45 சதவீதம் சரிவடைந்து (ரூ.3,161 கோடியில் இருந்து) ரூ.1,735 கோடியாக குறைந்துள்ளது.