சிறப்புக் கட்டுரைகள்

பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு ரூ.11,756 கோடியாக அதிகரித்தது

மார்ச் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு ரூ.11,756 கோடியாக அதிகரித்தது

தினத்தந்தி

புதுடெல்லி

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பரஸ்பர நிதி துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.22.85 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.23.37 லட்சம் கோடியாக அதிகரித்தது...

மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு ரூ.11,756 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, பங்கு மார்க்கெட், நிதிச்சந்தை, அரசு மற்றும் தனியார் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு குறைகிறது.

கடந்த மாதங்களில்...

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பரஸ்பர நிதி துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.22.85 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.23.37 லட்சம் கோடியாக அதிகரித்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது அது 2.2 சதவீத முன்னேற்றமாக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.16 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது அது 0.89 சதவீத சரிவாக இருந்தது. நிதிச்சந்தை மற்றும் வருவாய் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்குக் காரண மாகும்.

மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இத்துறையின் சொத்து மதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதலீடு வெளியேறியது

எனினும் மார்ச் மாதத்தில் இத்துறையில் இருந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.22,357 கோடி அளவிற்கு முதலீடு வெளியேறி இருக்கிறது. எனினும் பங்குசார்ந்த திட்டங்களில் (ஈ.எல்.எஸ்.எஸ். எனப்படும் பங்குசார்ந்த சேமிப்புத் திட்டங்கள் உள்பட) ரூ.11,756 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகமாகும்.

பங்குச்சந்தைகள் ஏற்றநிலைக்கு திரும்பியதால் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு

புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 15 பெருநகரங்களை தவிர்த்து மற்ற நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்