டெல்லி,
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் மோல்நுபிரவிர் மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.
கொரோனா தடுப்பூசிகளை அவரச தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், மத்திய அரசு மேலும் 2 தடுப்பூசிக்கு அனுமதி அளித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.