சிறப்புக் கட்டுரைகள்

அஞ்சல் அலுவலகத்தில் 38,926 பணி இடங்கள்

இந்திய அஞ்சல் அலுவலகங்களில் கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

நாடு முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 926 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 310 பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது உயர் கல்வியில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் சான்றிதழ் தேவையில்லை.

10-ம் வகுப்பில் உள்ளூர் மொழியை பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக்கொண்டு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-6-2022.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை