சிறப்புக் கட்டுரைகள்

வயோதிகத்தைத் தள்ளிப் போட முடியுமா?

நாம் எல்லோரும் முதிர்ச்சி அடைந்து வயோதிகத்தை எட்டுகிறோம். ஆனால் இது தேவைதானா? “என்றும் பதினாறு” என்னும் மார்க்கண்டேயர் போல நம்மால் நம் வயோதிகத்தைத் தள்ளிப்போட இயலுமா?

வயதாகுதல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொது என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால் ஓரளவு அது தவறு. வயதாவது என்பது நாம் நினைப்பதுபோல் நம் உடம்பும் வளர்ந்து அதுவும் வயதாகிறது என்பது நம் நினைப்பு. அது மேலும் சிதைந்து கடைசியில் மரணத்தை அளிக்கின்றது.

ஆனால் சில உயிரினங்களுக்கு இது நடப்பதில்லை. சில உயிரினங்களுக்கு வயதாவது என்பது வருடக்கணக்காய் நீளும், ஆனாலும் அந்த உயிரினங்களுக்கு உடல் சிதைவதுமில்லை, அது மட்டுமல்ல மடிவதுமில்லை..

உதாரணமாக இறால் மீன் வகைகளை எடுத்துக் கொள்வோம். விஞ்ஞானிகளின் பிரமிப்பு என்னவென்றால் உயிரியல் ரீதியாக இறால் அழிவதில்லை. இருப்பினும் அதன் மரணம் நோய்வாய்ப்பட்டதால் அல்லது அது உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நிகழ்கிறது. வயோதிகம் எப்போதும் அதை மரணத்திற்கு இழுத்துச் செல்வது இல்லை. நியூ லேண்ட் என்னும் இடத்தில் கரையோரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு இறால் 140 வருடம் வயதானதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற உயிரினங்களுக்கு வயதாவது என்பது ஒரு வழிப்பாதை இல்லை. மிகவும் சிறிய உயிரினமான ஜெல்லி பிஷ் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ அதன் (Polyp என்னும்) இளமைக் கட்டத்திற்கு திரும்பி விடுகிறது. அதன் செல்கள் வயதின் பின் பக்கம் சென்று இளமையாகி அது மீண்டும் வயது வந்த நிலை வரும் வரை வளர்கின்றது.

இப்பொழுது ஒரு யோசனை செய்வோம். இவ்வகை பொறியியலை மனிதர்களின் மீதும் செயல்படும்படி செய்தால் என்னவாகும்?

வயோதிகம் என்பது மறுக்கப்பட்ட நிகழ்வாக மாறலாம். இந்த பொறியியல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

மிகவும் எளிதாக கூறவேண்டுமானால் வயோதிகம் என்பது நம் டிஎன்ஏ-க்களில் நிகழும் ஒரு நிகழ்வாகும். நமது டி.என்.ஏ. கூறுகளின் முனைகளில் டிலோமர்ஸ் (Telomers) என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நமது காலணி நாடாக்களின் முனைகளில் உள்ள பிளாஸ்டிக் மாதிரி உபயோகமாகிறது. அதாவது டி.என்.ஏ. கூறுகளை காப்பாற்றவும் ஒழுங்குபடுத்தி வைக்கவும் உதவுகிறது.

எப்போதெல்லாம் நமது டி.என்.ஏ. பெருக்கம் அடைகிறதோ அப்போதெல்லாம் இந்த டிலோமர்ஸ் சற்று அழிக்கப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின் ஒரு நிலைப்பாட்டில் இந்த டிலோமர்ஸ் காணாமல் போகின்றது. அந்தக் கணத்தில், செல்கள் பெருகுவதை நிறுத்திக்கொண்டு மடிகின்றன. எப்போதெல்லாம் செல்கள் தாம் பிரிவடைய இயலாமல் போகின்றதோ அப்போது அதை முதிர் செல் (Senescent) என்று அழைப்பர். பொதுவாக கூறவேண்டுமானால் டிலோமர்ஸ் நீளம் அதிகமாக இருப்பின் செல்களின் ஆயுள் காலம் அதிகமாக இருக்க வகை அது செய்கிறது.

விஞ்ஞானிகள் எவ்வகை செல்கள் வயதாவதற்கு மூலகாரணமாகிறது என்பதையும் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது அதன் மூளையின் ஒரு பகுதியில் உள்ள தண்டு செல்கள் (Stem Cells) வயதாவதற்கு மூல காரணம் என்பதைப் பார்த்துள்ளனர். இவ்வகை செல்களை மூளையில் இருந்து நீக்கிய பிறகு எலிகளின் வயதாகும் நிலை மிகவும் சீக்கிரமாக நடந்தது. ஆனால் இளைய எலிகளிலிருந்து மேற்கூறிய தண்டு செல்களை மீண்டும் வயோதிக எலிகளில் புகுத்திய பொழுது அவைகளின் இளமை திரும்பியது. மேலும் அந்த எலிகள் 200 நாட்கள் அதிகம் வாழ்ந்தன. இந்த 200 நாட்கள் என்பது மனிதனின் 34 வருட ஆயுட் காலத்திற்கு சமம்.

மூளையில் ஹைபோதாலமஸ் (hypothalamus) பகுதியில்தான் வயோதிகத்தைக் கட்டுப்படுத்தும் தண்டு செல்கள் உள்ளன. இதுதான் மூளையின் நடுப்பாகம். நம் பசி, தூக்கம் கோபம், ஆக்கிரமிப்பு தன்மையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதி.

பொதுவாக எலியின் ஆயுட்காலம் 2 வருடம் வரைதான். எலிகளில் பதினோரு மாதத்திற்குப் பின்தான் மேற்சொன்ன தண்டு செல்கள் மறைய ஆரம்பிக்கின்றன. இருபத்தி இரண்டாவது மாதத்தில் மொத்தமாக காணாமல் போகின்றன. இவ்வகை முக்கிய செல்கள் இழப்பதால் எலி களின் உடலியல் மற்றும் நடத்தைகளில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. அவை: ஞாபகமறதி, கலகலப்பு குறைதல், மற்றும் தடகள செயல்திறன் குறைவு போன்றவை களாகும். இவை எல்லாமே வயதாவதற்கான காரணிகள்.

மேற்கூறிய ஆய்வுகள் எல்லாமே எலி களின் மேல் நடத்தப்பட்ட ஆய்வு என்றாலும் இவ்வகை பொறியியல் மனிதர்கள் மேல் நிகழ்த்தப்பட்டால் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பிற்காலத்தில் மேம்படுத்தும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

என்னதான் நாம் முதுமையை கட்டுப்படுத்தினாலும் நம்மால் ஏற்கனவே பிரிவுபடாமல் இருக்கும் செல்களைக் காக்க என்ன செய்ய இயலும்? வயதாக ஆக நம்மில் முதிர் செல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவைகளால் நமக்கு இதய நோய்கள், கண் பார்வை மங்குதல் மற்றும் எலும்பு களின் தேய்மானம் போன்ற வயோதிக நிகழ்வு களைத் தடுக்க இயலாது.

இப்போது நாம் நமக்கு ஒரு வழி கிடைத்ததாக நினைத்தாலும் ஆராய்ச்சியாளர்கள் கேன்சர் தடுப்பு மருந்துகளின் உதவியால், தேர்வு செய்யப்பட்ட முதிர் செல்களை விலக்க வழி கண்டுபிடித்து வருகின்றனர்.

ஒரு ஆய்வில் இளைய எலிகளின் உடலில் முதிர் செல்களைப் புகுத்திய பின் நாம் எதிர்பார்ப்பது போல் அந்த எலிகள் வயோதிக நிலைக்கான அடையாளத்தைக் காண்பித்தன. இன்னொரு ஆராய்ச்சி யில் முதிர்ச்சியுடன் கேன்சர் தடுப்பு மருந்து சேர்த்து செலுத்தியபோது அந்த எலிகள் 36 விழுக்காடு அதிக நாட்கள் வாழ்ந்தன. இது கேன்சர் தடுப்பு மருந்து சேர்ந்து தரப்படாத எலிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைசியாக சொல்லப்போனால் இவ்வகை ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியின் நோக்கம் மரணத்தை நீக்குவதற்கு அல்ல. மனிதனின் ஆயுட் காலத்தை நீட்டி வைப்பதற்கே. தற்போதைக்கு நாம் காண்பது எல்லாமே அனுமானங்கள் தான்.

(தொடரும்)

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...