மின்னணு பொருட்கள் தயாரிக்கும் கொரியாவின் சாம்சங் நிறுவனம் நவீன வாக்குவம் கிளீனரை ஜெட்போட் 80, ஜெட்போட் 80 பிளஸ் மற்றும் ஜெட்போட் 95 ஏ.ஐ. பிளஸ் என்ற பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.45 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது. பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.1.34 லட்சம். இது செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம் செயல்படக்கூடியது. இதில் லிடார் சென்சார் உள்ளது.
சுத்தம் செய்ய வேண்டிய அறையின் அளவை வரைபடமாகப் பதிவு செய்தால், அதற்கேற்ப இது சுத்தம் செய்துவிடும். பிரீமியம் மாடலில் செல்லப் பிராணிகள் மற்றும் மனிதர்கள் நடமாட்டத்தைக் கண்டறியும் உணர் சென்சார் உள்ளது. இதனால் எதன் மீதும் படாமல், இடித்துவிடாமல் அறையை சுத்தம் செய்யும். செயலி (ஆப்) மூலமும் இயங்கக் கூடியது.