சிறப்புக் கட்டுரைகள்

கியா கார்னிவல் லிமோசின் பிளஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக லிமோசின் பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக லிமேசின் பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் நான்கு வேரியன்ட்கள் (பிரீமியம், பிரஸ்டீஜ், லிமோசின் மற்றும் லிமோசின் பிளஸ்) வந்துள்ளன. இதில் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய லோகோ இந்த மாடலில் இடம் பெற்று உள்ளது.

ஹார்மன் கார்டோன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் பிரீமியம் மாடலில் இடம்பெற்றுள்ளது. டிரைவர் இருக்கை 10 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது. பின் இருக்கை பயணிகளுக்கு 10.1 அங்குல திரை உள்ளது. அவர்கள் அதில் தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்சங் களை கண்டு மகிழ்ந்தபடி பயணிக் கலாம். டயர் காற்று அழுத்தத்தை உணர்த்தும் கருவியும் உள்ளது. நான்கு சிலிண்டர் கொண்ட இதன் என்ஜின் 200 ஹெச்.பி. திறனையும், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. 8 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி உள்ளது.

இரண்டு வண்ணங்களைக் கொண்ட மேற் கூரை, பக்கவாட்டு கதவு, மூன்று நிலை களில் குளிர் கட்டுப்பாட்டு வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, குரூயிஸ் கண்ட்ரோல், இரண்டு ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் கொண்டது. மேலும் இ.பி.டி., ஐ- சோபிக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் கேமரா ஆகியனவும் உள்ளன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை