சிறப்புக் கட்டுரைகள்

உயிருடன் மற்றொரு பாம்பை விழுங்கும் ராஜ நாகம்..! வைரல் வீடியோ

ராஜ நாகங்களை கண்டால் பிற பாம்புகளும் அஞ்சி நடுங்கும் என்பதே உண்மை.

தினத்தந்தி

மும்பை, 

உலகில் கொடிய விஷம் கொண்ட உயிரினங்களில் ஒன்று ராஜ நாகம். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், ராஜ நாகங்களை கண்டால் பிற பாம்புகளும் அஞ்சி நடுங்கும் என்பதே உண்மை.

இதனை நிரூபிக்கும் வகையில், ஒரு பாம்பை அப்படியே மெல்ல மெல்ல ராஜ நாகம் விழுங்கும் வீடியோ வெளியாகி கண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.மன தைரியம் மிகுந்தவர்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்.

அந்த வீடியோவில், பாலைவனத்தில் மண்ணுக்குள் இருக்கும் பொந்தில் ஒரு பாம்பு நுழைய முற்பட்டபோது, அதனை ஒரு ராஜ நாகம் வாயால் கவ்வி பொந்தின் உள்ளே நுழைய விடாமல் விழுங்குகிறது. இறுதியில் அந்த பாம்பின் வால் ராஜ நாகத்தின் வாயிலிருந்து வெளியே நீண்டு கொண்டிருக்கிறது.

இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு