சிறப்புக் கட்டுரைகள்

லாவா புரோபட் வயர்லெஸ் இயர் போன்

இந்தியாவைச் சேர்ந்த மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா தற்போது வயர்லெஸ் இயர்போனை புரோபட் 21 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் 60 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். காதில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆகும் தன்மைகொண்டது. 20 நிமிடம் சார்ஜ் செய்தாலே 3 மணி நேரம் இது செயல்படும். இது புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. இதன் கேசில் 500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் மூலம் இயர்போனை 5 முறை சார்ஜ் செய்ய முடியும். இந்த இயர்போனின் விலை சுமார்

ரூ.1,299.