சிறப்புக் கட்டுரைகள்

சோர்வை விரட்டலாம்!

எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

தினத்தந்தி

* தூங்குவதற்கு உபயோகப்படுத்தும் தலையணையை குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.

* மெத்தையை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றியமைக்க வேண்டும்.

* படுக்கை அறையில் நிலவும் வெப்பநிலையும் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அங்கு மிதமான வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* இரவு நேரங்களில் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு பொழுதில் கண்களில் அதிக வெளிச்சம்படக்கூடாது. செல்போனில் இருந்து உமிழப்படும் வெளிச்சம் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனின் உருவாக்கத்தை தடுத்துவிடும்.

அதனால் படுக்கை அறைக்குள் செல்போனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

* மதுப்பழக்கமும் தூக்கத்தை தடுத்து சோர்வை ஏற்படுத்திவிடும். மதுக்குடிக்கும்போது அதிலிருக்கும் ஆல்கஹால் தூக்கத்தை தூண்டும் வகையில் செயல்படும். சில மணி நேரங்களிலேயே எதிர்மறையாக செயல்பட்டு தூக்கத்தை தடுத்து சோர்வை உண்டாக்கிவிடும்.

அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியமானது. அது சோர்வை விரட்டி உடலை புத்துணர்ச்சிக்குள்ளாக்கும்.

* தூங்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யக்கூடாது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை