சிறப்புக் கட்டுரைகள்

புதிய வசதியுடன் எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி

டி.வி. தயாரிப்பில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் புகுத்தும் கொரிய நிறுவனமான எல்.ஜி. எலெக்ட் ரானிக்ஸ் தற்போது புதிதாக திரைப்படங்களைத் தயாரிப்போர் எத்தகைய வசதிகளோடு படங்களை பார்ப்பார்களோ அதே தரத்தில் படங்களைப் பார்க்கும் வசதி கொண்ட டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

`பிலிம்மேக்கர் மோட் என்ற பிரத்யேக வசதியை இந்நிறுவனம் இந்த டி.வி.யில் உருவாக்கி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தை யு.ஹெச்.டி. நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்நிறுவனம் தனது டி.வி.யில் புகுத்தியுள்ளது. திரையரங்கில் பார்ப்பது போன்ற அனுபவத்தை வீட்டில் உள்ள டி.வி.க்களில் பார்ப்பது என்ற நிலையைத் தாண்டி திரைப்படத்தை தயாரிப்போர் பார்க்கும் நுட்பத்தில் படங்களை பார்க்கும் வசதியை இந்நிறுவன டி.வி.க்கள் அளிக்கும். இதற்கென அமேசான் நிறுவனத்துடனும் இணைந்துள்ளது.

இதனால் பிரைம் வீடியோவில் படங்களைப் பார்க்கும் போது அதிலும் குறிப்பாக 4-கே, 8-கே ரெசல்யூஷன் கொண்ட டி.வி.க்களில் இத்தகைய வசதியை இந்நிறுவனம் புகுத்தியுள்ளது. இதில் கூடுதல் சிறப்பாக டால்பி விஷன் ஐகியூ நுட்பமும் உள்ளது.

இது காட்சிகள் எந்த தன்மையில் படமாக்கப்பட்டதோ அதே தரத்துக்கு தானாகவே மாறும் நுட்பமாகும். அதுவும் எத்தகைய வெளிச்ச பின்புலத்தில் படமாக்கப்பட்டதோ அதே அளவிலான வெளிச்சம் டி.வி. உள்ள அறையின் வெளிச்ச அளவுக்கு ஏற்ப மாறுபடும். இதனால் எவ்வித கண் உறுத்தலும் இல்லாமல் தெளிவாகக் காட்சிளைக் கண்டு ரசிக்க முடியும். குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இத்தகைய வசதி கொண்ட டி.வி.யை எல்.ஜி. அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை