இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, உதவி பொறியாளர், சயின்டிஸ்ட், சீனியர் டிவிஷனல் மெடிக்கல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஆயுர்வேத துறையில் மருத்துவ அதிகாரி பணிக்கு 37 இடங்களும், யுனானி பிரிவில் மருத்துவ அதிகாரி பணிக்கு 7 இடங்களும் உள்ளன. உதவி என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ், அர்மாமென்ட், வெப்பன்ஸ், சிவில்) பணிக்கு 66 இடங்களும் உள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
ஆயுர்வேதம், யுனானி மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்கள், ஆந்த்ரோபாலஜி முதுநிலை படிப்பு படித்தவர்கள், முதுநிலை அறிவியல், சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, எம்.பி.பி.எஸ், முதுநிலை வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
விருப்பமுள்ளவர்கள், முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும், பிப்ரவரி 13-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.