இது 1.69 அங்குல ஹெச்.டி. டிஸ்பிளே திரையைக் கொண்டுள்ளது. 30 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உங்களது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் காட்டும். இதயத் துடிப்பை துல்லியமாக அளவிடும். மூச்சு செயல்பாடு, தூக்கக் குறைபாடு ஆகியவற்றை உணர்த்தும்.
இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை செயல்படும். திரையில் இரண்டாக பிரிக்கும் வசதி (ஸ்பிளிட்), ஸ்மார்ட்போன் கேமராவை இயக்கும் வசதி, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட தகவல்களை உங்கள் ஸ்மார்ட் கடிகாரம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,999. சிவப்பு, கருப்பு, சில்வர், பச்சை, நீலம், தங்க நிறங்களில் வந்துள்ளது.