சிறப்புக் கட்டுரைகள்

நத்திங் வயர்லெஸ் இயர்போன்

லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

நீண்ட உருளையில் மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8,499.

இந்த உருளைதான் சார்ஜிங் கேசாகும். வெளிப்படையாக தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் காது மடல்களின் வடிவமைப்பை அளவீடாகக் கொண்டு, அதில் சராசரி அளவீட்டு அடிப் படையில் இது உருவாக்கப்பட்டு அனைவருக்கும் கச்சித மாகப் பொருந்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இயர்போனின் எடை வெறும் 4.4 கிராம் மட்டுமே. மறுமுனையில் பேசுபவரது குரல் மிகத் துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 7 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 22 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. வெள்ளை நிறத்தில் வந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்