இவை 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டவை. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.
இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்கு தளம் உள்ளது. பின்புறம் 13 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.
ஏ 76 மாடல் நீலம், கருப்பு நிறங்களில் வந்துள்ளது. விலை சுமார் ரூ.17,499. ஏ 96 மாடல் விலை சுமார் ரூ.19,999.