கர்ப்ப காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதல்ல. அதில் புரோமிலைன் நிறைந்துள்ளது. அது கருப்பை வாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள் அன்னாசி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனினும் கர்ப்ப காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடக்கூடாது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
திராட்சை பழம் சாப்பிடுவதையும் முடிந்தவரை தவிர்க்கலாம். ஏன்என்றால், திராட்சை பழங்கள் விளைவிக்கப்படும்போது அதில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. திராட்சையில் இருக்கும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை என்றாலும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்காத திராட்சைகளாக இருந்தால் நல்லது. அதுபோல் பழங்கள், உலர்தானியங்கள் எதுவாக இருந்தாலும் கழுவி சுத்தம் செய்தபிறகுதான் சாப்பிட வேண்டும். பழங்களின் தோல் பகுதியை நீக்கிவிடுவதும் நல்லது. அதில் நோய் தொற்று கிருமிகள் இருக்கக்கூடும். சேத மடைந்த பழங்களை சாப்பிடு வதையும் தவிர்க்க வேண்டும்.