சிறப்புக் கட்டுரைகள்

போகோ எப் 4 ஸ்மார்ட்போன்

போகோ நிறுவனம் எப் 4 என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 870 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்கள் மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 20 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் பகுதி உள்ளது. இதன் எடை 195 கிராம். நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, பச்சை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும்.

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.27,999. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.29,999. பிரீமியம் மாடலான 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.33,999.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்