சிறப்புக் கட்டுரைகள்

மாரடைப்புக்கு பிந்தைய மாற்றங்கள்

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் மாரடைப்புக்கு ஆளாகும் நிலை உருவாகிவிட்டது. ஒருவருக்கு முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு பிறகு வாழ்க்கை முறையில் சில கடுமையான மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.

தினத்தந்தி

இதய நோய் மீண்டும் வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுதான். தினமும் சாப்பிடும் உணவின் கலோரி அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக கலோரிகளை கொண்ட உணவு வகைகள் மற்றும் கொழுப்பு, சோடியம், சர்க்கரை அதிகம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு களையும் தவிர்க்க வேண்டும்.

இதயம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சிகளை செய்யுங் கள். வாரத்தில் 150 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட பயிற்சி களை செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நேர்மறையான சிந்தனைகள், அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்திடும். ஒருமுறை மாரடைப்பு வந்த பிறகு மனச்சோர்வு அல்லது பதற்றம் அதிகரிக்கும். அதனால் மருத்துவரை அணுகி மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விவாதித்து ஆலோசனை பெறுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்தை பாதிக்கும். ரத்த நாளங்களும் பாதிக்கப்படும். ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்து செல்வதிலும் சிக்கல் ஏற்படும். ஆதலால் புகைப் பழக்கத்தை கைவிடுவதோடு, புகைப்பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

உடல் எவ்வளவு எடையை சுமக்கிறதோ, அந்த அளவுக்கு இதயமும் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். மருத்துவர் பரிந்துரை செய்த எடையை தக்கவைப்பதற்கு உடற்பயிற்சி அவசியமானது.

முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் அதுபற்றி நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது. எதிர்பாராத அசவுகரியம் நேர்ந்தால் தாமதமின்றி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்