சிறப்புக் கட்டுரைகள்

எடையை குறைக்க உதவும் முறையான தூக்கம்...!

எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்து கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கமும் வேண்டும் என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

முறையான தூக்கம் எப்படி எடையை குறைக்க உதவும் என்பதைப் பார்ப்போம். தூக்கமானது, பசியை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும். சரியாகத் தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாகவும் ஆராயச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கிய காரணிகள். சரியாக தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு