சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி டெக்லைப் ரோபோட் வாக்குவம் கிளீனர்

கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்ஸா உதவியோடு இது செயல்படும். தண்ணீர் ஊற்றி தரையைத் துடைக்கும் நுட்பம் கொண்டது.

தினத்தந்தி

ரியல்மி நிறுவனம் டெக்லைப் ரோபோட் வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது. இதில் லிடார் ஸ்மார்ட் வரைபட மற்றும் தேடல் நுட்பம் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்ஸா உதவியோடு இது செயல்படும். தண்ணீர் ஊற்றி தரையைத் துடைக்கும் நுட்பம் கொண்டது. தரையில் உள்ள தூசுகளை உறிஞ்சிய பிறகு, தண்ணீரால் துடைக்கும் திறன் கொண்டிருப் பதால் வீடுகளுக்கு மிகவும் ஏற்றது.

அலுவலகம் செல்லும் சமயத்தில் இதில் வீட்டின் அறை அளவுகளை வரைபடம் மூலம் பதிவு செய்து ஆன் செய்துவிட்டால் இது வீட்டை சுத்தப்படுத்தி துடைத்துவிடும். பக்கவாட்டிலும் பிரஷ் இருப்பதால் இது தரையை மட்டுமின்றி சுற்றுப்புற சுவரையும் சுத்தம் செய்யும். 5,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.26,590.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்