சிறப்புக் கட்டுரைகள்

மதுரை எய்ம்ஸ்சில் பணி

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 94 பேராசிரியர்கள் தேவை என தகவல் தெரிவித்துள்ளனர். தகுதியுடையவர்கள் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) சார்பில் மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் (20), கூடுதல் பேராசிரியர் (17), இணை பேராசிரியர் (20), உதவி பேராசிரியர் (37) என 94 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்குட்பட்டவர்களும், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். பேராசிரியர் பதவிக்கு 14 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் அல்லது ஆராய்ச்சி துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் பேராசிரியர் பணிக்கு 10 ஆண்டுகள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி அனுபவமும், இணை பேராசிரியர் பதவிக்கு 6 ஆண்டுகள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பேராசிரியர் பதவிக்கு 3 ஆண்டுகள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும். வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆன்லைனில் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://jipmer.edu.in/aiims-madurai என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்