கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.110 கோடியை மொத்த லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் வளர்ச்சியாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.2,638 கோடியாக இருக்கிறது. மொத்த லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.259 கோடியாக உள்ளது.
சாஸ்கென் டெக்னாலஜிஸ்
சாஸ்கென் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.27 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.26 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 5.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5.3 சதவீதம் அதிகரித்து (ரூ.129 கோடியில் இருந்து) ரூ.136 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 9.7 சதவீதம் உயர்ந்து ரூ.90 கோடியாக இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.504 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.7.50-ஐ இறுதி டிவிடெண்டாக அறிவித்து இருக்கிறது. ஆண்டு இறுதி நிலவரப்படி இந்நிறுவனப் பணியாளர்கள் எண்ணிக்கை 1,833-ஆக இருக்கிறது.
சிபி டெக்னாலஜிஸ்
சிபி டெக்னாலஜிஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.30 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 15 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 7.2 சதவீதம் அதிகரித்து ரூ.562 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.107 கோடியாக இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2,155 கோடியாக இருக்கிறது.
மகிந்திரா பைனான்ஸ்
மகிந்திரா பைனான்ஸ் நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ரூ.588 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 87 சதவீதம உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 37 சதவீதம் அதிகரித்து ரூ.2,480 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
மொத்த வாராக்கடன் 5.8 சதவீதமாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது 9 சதவீதமாக இருந்தது.
இந்தியாபுல்ஸ் இன்டெக்ரேட்டட்
இந்தியாபுல்ஸ் இன்டெக்ரேட்டட் சர்வீசஸ் நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ரூ.73 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.
2017-18-ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 54 சதவீத வளர்ச்சியாகும். அப்போது லாபம் ரூ.47 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.125 கோடியில் இருந்து) ரூ.166 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.78 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மொத்த வருவாய் ரூ.350 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.265 கோடியாக இருந்தது.