கேலக்ஸி சீரிஸில் வந்துள்ள இந்த மாடல்கள் கேலக்ஸி புக் புரோ மற்றும் கேலக்ஸி புக் புரோ 360 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இது 13.6 அங்குல திரை மற்றும் 15.6 அங்குல அமோலெட் திரைகளைக் கொண்டதாக வந்துள்ளது. மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 சி.பி.யு. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. நினைவகம் உள்ளது.
இந்நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே தொழில்நுட்பம் லேப்டாப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கலர் என்ஜின் தொழில்நுட்பம், திரையில் தெரியும் காட்சிகளின் தன்மைக்கேற்ற வண்ணங்களை தன்னிச்சையாக வழங்கும். வீடியோ அழைப்புகளின் போது காட்சிகளுடன் மறுமுனையில் பேசுபவரது ஒலி, உரையாடல் துல்லியமாக கேட்கும் வகையில் இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஸ்மார்ட் திங்ஸ் செயலி உள்ளது. எளிதாக புளூடூத் இணைப்பைப் பெறும் வசதி கொண்டது. இதில் மேம்படுத்தப்பட்ட எஸ் பேனா வசதி உள்ளது. மேலும் கிளிப் ஸ்டூடியோ பெயிண்ட் சாப்ட்வேர் இந்த லேப்டாப்போடு வழங்கப்படுகிறது. நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் வந்துள்ளது. 13 அங்குல மாடல் விலை சுமார் ரூ.74,510. மற்றொரு மாடலான 15 அங்குல லேப்டாப் விலை சுமார் ரூ.81,961.